மீட்டல் கரந்தையாம் சிவக்கரந்தை
சிவக்கரந்தை இரு வகைப்படும். சிகப்பு மற்றும் வெள்ளை. பொதுவாக பூக்களின்,காய்களின் நிறத்தை வைத்து சிவக்கரந்தை சிகப்பு என்றும் வெள்ளை என்றும் அடையாளம் காணலாம். சில செடிகள் பூ பூப்பதற்கு முன்பும்,சில செடிகள் பூ பூத்த பிறகும் மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக சிவக்கரந்தையை பூ பூப்பதற்கு முன்பும், குப்பை மேனியை பூ பூத்த பிறகும் பயண்படுத்த வேண்டும் .
எந்த செடி ரசத்தை கட்டுமோ அந்த செடி வீரியத்தை கட்டும் அல்லது எந்த செடி வீரியத்தை கட்டுமோ அந்த செடி பாதரசத்தை கட்டும்.
சிவக்கரந்தையில் சிகப்பு பூ கந்தக சத்தும் , வெள்ளை பூ ரச சத்தும் உடையது . சித்தர்கள் கூறிய கற்ப மூலிகைகளில் முக்கியமான ஒன்றாகும், இதில் இருந்து சத்து (SALT) எடுப்பார்கள். கந்தகத்தை (SULPHUR) செந்தூரிக்கவும், தாலகம் ( YELLOW ARSANIC ) செந்தூரிக்கவும் பயண்படும்.
இது ஒரு தெய்வீகம் நிறைந்த செடி. இதை நிலைகளால் சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் பூஜைகள் செய்யலாம்.
சிவக்கரந்தை சத்தாம்
*****************************************
****************************
சிவக்கரந்தையை நிழலில் உலர்த்தி ,சாம்பலாக்கிக் கொள்ளவேண்டும். இந்த சாம்பல் ஒரு படி ,பனிஜலம் அல்லது சுத்தஜலம் இரண்டு படி என ஒரு மண்பாண்டத்தில் இரண்டையும் கொட்டி நன்றாக கலக்கிவிட்டு காற்றில்லாத இடத்தில் வைத்து வேறு ஒரு மண்பாண்டத்தால் மூடவேண்டும்.
பிரதிதினமும் நான்கைந்து தடவை மரக்கொம்பினால் கலக்கி வரவேண்டும். இவ்விதம் மூன்று நாட்கள் சென்ற பிறகு நான்காம் நாள் கலக்காமல் வைத்து ,ஐந்தாவது நாள் தெளிவாக இறுத்து (தெளிந்ததை மட்டும் எடுத்து) மண்பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைத்து சிறிய தீயில் எரித்து வரவேண்டும். அப்போது இதனை அடிக்கடி மரத்துடுப்பால் துழவியும் வரவேண்டும். குழம்பு பதம் வந்தவுடன் ஓர் ஈர்க்குச்சியினால் தொட்டு நகத்தின் மீது வைத்து ஆறினபின் இறுகி கெட்டியானால் , பதமென கீழ் இறக்கி ஒரு பீங்கான் பாத்திரத்தில் வழித்து அதை வெயிலில் வைத்து வந்தால் ஈரமுளர்ந்து சத்தாகிவிடும் .இதுவே சிவக்கரந்தை சத்தாம் .
அளவு :- குன்றிமணி எடை ஒன்று முதல் நான்கு வரையில் எடுத்து துணை மருந்தாக தேன் /நட்டுசர்க்கரை/நெய்/அல்லது வெண்ணை முதலியவைகளில் காலை ,மாலை இரு வேளையும் உள்ளுக்கு உபயோகிக்கலாம் .
உபயோகம்:- இரத்த சம்மந்தமான வியாதிகளெல்லாம் தீர்த்து இரத்தத் சுத்தியாக்கி தேகதிடம் , தேகபலம் , தேகவசீகரம் முதலியவை உண்டாகி ஆத்ம சக்தி விருத்தியாகும் .இதனை எல்லா நோய்களுக்கும் உபயோகிக்கலாம். வேறு லேகியம் / சூரணம் முதலியவைகளிலும் தகுந்த அளவு சேர்த்து உபயோகித்தால் அந்தந்த மருந்துகளுக்குரிய குணங்களை சிறப்பு செய்யும் . இரசவாத முறைகளில் இரசம் முதலிய சரக்குகளை கட்டவும் உபயோகிக்கலாம்.