தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ந...பெண்களைத் தாக்கும் மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்!


சூப்பர் உணவுகள்!சூப்பர் உணவுகள்!சூப்பர் உணவுகள்!


        ற்போது நிறைய பெண்களை அமைதியாகத் தாக்கும் ஓர் கொடிய நோய் தான் புற்றுநோய். உலகில் மில்லியன் கணக்கிலான பெண்கள் மார்பக புற்றுநோயால் அவஸ்தைப்படுகின்றனர். ஆரம்பத்திலேயே மார்பக புற்றுநோயை கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம்.
         ஆனால் அதுவே முற்றிய நிலையில் அறிந்து, சிகிச்சை எடுத்தால், அதனால் மிகுந்த அவஸ்தைப்படக்கூடும். இந்த மார்பக புற்றுநோய் நமது அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் உணவுகளால் தான் வருகின்றன. இருந்தாலும், ஒருசில உணவுகளை உட்கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.
      இங்கு மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சில சூப்பர் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள். 
காளான் 
     கடந்த சில வருடங்களுக்கு      முன் மேற்கொண்ட ஆய்வுகளில் காளான் மார்பக புற்றுநோயைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது. காளானில் உள்ள உட்பொருட்கள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, அது பரவுவதைத் தடுக்கும்.
ப்ராக்கோலி
   ப்ராக்கோலியும் மார்பக புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும். எனவே பெண்கள் வாரத்திற்கு 2-3 முறை ப்ராக்கோலியை உணவில் சேர்த்து வர, மார்பக புற்றுநோயைத் தடுக்கலாம்.
மஞ்சள்
  மஞ்சளில் உள்ள குர்குமின், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும், அது பரவுவதையும் தடுக்கும். எனவே தினமும் ஒரு டம்ளர் பாலை சூடேற்றி, அதில் மஞ்சள் தூள் மற்றும் தேன் கலந்து குடித்து வர, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
பூண்டு
பூண்டு பல்வேறு நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. அதில் மார்பக புற்றுநோயைத் தடுப்பதும் ஒன்று. எனவே புற்றுநோய் தாக்காமல் இருக்க அன்றாட உணவில் பூண்டு சேர்த்து வாருங்கள்.
பசலைக்கீரை
பசலைக்கீரையில் உள்ள சக்தி வாய்ந்த உட்பொருட்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, மார்பக புற்றுநோய் வருவதைத் தடுக்கும். எனவே இந்த கீரை கிடைக்கும் போது தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.
சால்மன் மீன்
சால்மன் மீன் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். ஏனெனில் அதில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளது. எனவே முடிந்தால் வாரம் ஒருமுறை சால்மன் மீனை சமைத்து சாப்பிடுங்கள்.
ஆலிவ்
ஆலிவ் ஆயிலில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இவை புற்றுநோய் செல்களை அழிக்கும் முக்கிய செயலை செயல்கிறது. எனவே உயிரைப் பறிக்கும் கொடி மார்பக புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்க ஆலிவ் ஆயிலை அன்றாட சமையலில் சேர்த்து வாருங்கள்.


சூப்பர் உணவுகள்சா ல்மன் மீன்Thagavalthalam சூப்பர் உணவுகள்Thagavalthalam சூப்பர் உணவுகள்
பசுமைக்கீரைகள்

pasumai4u.com தூதுவளைதூதுவளை        
                                                                                     தூதுவளை > இது ஓரு "ஞானமூலிகை". வெப்பபம் உண்டாக்கி [Stimulant],  கோழை அகற்றி [Expectorant], உரமேற்றி [Tonic]. இக்கீரையை பச்சையாக உண்டு முனிவர்கள் ஞானம் பெற்றறதாக சித்தர்களின்  நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

     வாத, பித்த, சிலேத்துமங்கள் சமன் படுத்தபடுகிறது, இதனால் ஏற்படுகின்ற நரம்பு தளரிச்சி, நீரிழிவு, அஸ்த்துமா, காசநோய், இருதயவாய்வு போன்ற நோய்கள் குணமாகிறது. இதன் பூ தாது புஷ்டியை உண்டாக்கிகிறது, வேர் நரையையும், பல் வியாதியையும் போக்குகிறது.
தூதுவளை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந் தாவரம்
தரப்படுத்தப்படாத: மெய்யிருவித்திலையி
தரப்படுத்தப்படாத:       Asterids
வரிசை:கத்தரி வரிசை
குடும்பம்:கத்தரிக் குடும்பம்
பேரினம்:கத்தரிப் பேரினம்
இனம்:S. trilobatum
இருசொற் பெயரீடு
Solanum trilobatum

www.pasumai4u.com
            -----------------------------------------*****--------------------------------------------

ஆரைக்கீரை
pasumai4u.com ஆரைக்கீரை
                      
    ஆரைக்கீரை "கற்ப மூலிகை"களில் ஒன்றாகும்.
பித்த நோய்களை போக்கும், மூளைக் கோளாறு நீக்கும். தீராத பைத்தியம் தீர்க்கும், பால் வினை நோய்க்கு சிறந்த உணவே மறுந்து.

மூளைக் கோளாறுகளை நீக்க இக்கீரையை வெள்ளாட்டுப் பாலில் சிறிது மிளகு சேர்த்து, அரைத்து காலை வேளையில் பூசி மாலையில் குலித்து வரவேண்டும்.
ஆரக்கீரை
ஆரக்கீரை
உயிரியல் வகைப்பாடு
திணை:தாவரம்
பிரிவு:பன்னம்
வகுப்பு:Polypodiopsida /
 Pteridopsida வார்ப்புரு:Au
வரிசை:Salviniales
குடும்பம்:Marsileaceae
பேரினம்:Marsilea
www.pasumai4u.com
                ------------------------------------------*****--------------------------------------------------வல்லாரை
உயிரியல் வகைப்பாடு
திணை:தாவரம்
தரப்படுத்தப்படாத:பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத:மெய்யிருவித்திலையி
தரப்படுத்தப்படாத:Asterids
வரிசை:Apiales
குடும்பம்:Mackinlayaceae
பேரினம்:Centella
இனம்:C. asiatica
இருசொற் பெயரீடு
Centella asiatica

www.pasumai4u.com

விரைவில் உங்கள் வீட்டிலே நஞ்சில்லா கீரைகள்


ஆரைக்கீரை                                                தவசிக்கீரை                                        தூதுவலைக்கீரை 


தூதுவலைக்கீரை Pasumai Keeraiஆரைக்கீரை Pasumai keeraiதவசிக்கீரை Pasumai keerai
நச்சிக்கொட்டை                    ஓர் இதழ்த்தாதாமரை             பொன்னாங்கன்னி
நச்சிக்கொட்டைக்கீரை Pasumai keeariபொண்ணாகண்ணிணி Pasumai keeraiஓர் இதழ்டத்தம்ரை  Pasumai keerai
 நிலவேம்பு                                     முருங்கை                               வல்லாரை
pasumai keerai வல்லாரைpasumai keerai நிலவேம்பு  pasumai keerai முருங்கை

 Contact  -  9025776699               E-mail --  sales@pasumai4u.com

பிரசவ தழும்புகளை மறைய வைக்கும் அற்புத மூலிகைAloe vera gel thagavalthalam


     ருமத்தில் வரிவரியான தழும்பு பல காரணங்களால் ஏற்படும். உடல் எடை குறையும்போது, பிரசவம் ஏற்படும்போதும் உண்டாகும். விரிந்த சருமம் சுருங்குவதால் திசுக்களில் ஏற்படும் பாதிப்புதான் அந்த வரிவரியான தழும்பு. இது தோள்பட்டை, தொடை, மார்பு, வயிறு போன்ற பகுதிகளில் உண்டாகும்.
    இந்த தழும்புகளை ஒரு நாளில் மறைய செய்யும் மேஜிக் எங்கும் இல்லை. விளம்பரங்களில் வருவது எல்லாம் வணிக வளர்ச்சிக்கே தவிர எந்தவிதமான உபயோகமும் இல்லை. இயற்கையான பொருகளை தினமும் தொடர்ந்து தவறாமல் உபயோகித்தால், நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். இவை அற்புதமான பலனைத் தரும்பவை. தொடர்ந்து உபயோகித்தால் நல்ல பலனைத் தரும். அப்படியான இயற்கைப் பொருட்களைப் பார்க்கலாம்.
சோற்றுக் கற்றாழை 
   சோற்றுக் கற்றாழை தழும்புகளை அகற்றுக் குணங்களைப் பெற்றவை. தினமும் கற்றாழையின் சதையை எடுத்து வயிற்றுப் பகுதியில் இருக்குமிடத்தில் தடவுங்கள். அரை மணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும். தொடர்ந்து உபயோகிக்கும்போது நல்ல பலனைத் தரும்.
கோகோ பட்டர் 
கர்ப்பமாக இருக்கும்போதே கோகோ பட்டரை தினமும் உபயோகித்து வந்தால், பிரசவத்திர்கு பின் தழும்புகள் இல்லாமல் முழுவதும் மறைந்துவிடும். அதனை இரவில் உபயோகிப்பது சிறந்தது. தொடர்ந்து உபயோகித்தால் தழும்புகள் மறைவதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள்
எலுமிச்சை சாறு+ வெள்ளரி சாறு 
எலுமிச்சை சாறு தழும்புகளை மறையச் செய்வதில் சிறந்தது. எலுமிச்சை சாறு எடுத்து அதில் சம அளவு வெள்ளரிக்காய் சாறை கலந்து தழும்புகலின் மீது தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
பாதாம் எண்ணெய் 
பாதாம் எண்ணெய்,தேங்காய் எண்ணெய் இந்த இரண்டுமே தழும்புகளை மறையச் செய்பவை. சம அளவு பாதாம் எண்ணெயில் தேங்காய் என்ணெய் கலந்து அவற்றில் சிறிது மஞ்சள் சேர்த்து வயிற்றில் தடவி 15 நிமிடம் ஊறிய பின் குளித்து வந்தால் தழும்புகள் முழுவதும் மறைந்துவிடும். முயன்று பாருங்கள்.

அப்ரிகாட் மாஸ்க் 
அப்ரிகாட் மாஸ்க் ஆப்ரிகாட் பழத்திலுள்ள விதையை எடுத்தபின் சதையை நன்றாக மசித்து தழும்பின் மீது தடவுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவவும் அல்லது ஆப்ரிகாட் எண்ணெய் கடைகளில் கிடைக்கும். அந்த எண்ணெய் சிறிதளவு எடுத்து எலுமிச்சை சாறு கலந்து உபயோகித்தால் விரைவில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்

தவசி கீரை
தவசி கீரை
 murungai keerai முருங்கைப் பூ  கீரை
முருங்கை கீரை
www.thagavalthalam.com
ஓரிதழ் தாமைரை
 டலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.
  முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.
  ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.
  விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.
  துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.
ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்
  விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.
  ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.
 ஆண்மை பெருக த்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை அல்லலது, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம். 

                                             see more  www.thagavalthalam.com/

வெந்தயத்தின் மருத்துவக் குணங்கள்!

பசுமை நாயகன் Pasumai Nayagan


       உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

    எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம். 
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். 
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். 
வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது. 

       தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம். 

       வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது. 
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும். 

       வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும். 
மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும். 

    எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும். 
இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும். மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும். 

        வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம். 
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

ஓரிதழ் தாமரை

பசுமைநாயகன் Pasumai Nayagan


        மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப்பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மனித இனத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை கண்டறிந்து சொன்னார்கள்.


பொதுவாக மனிதர்களைத் தாக்கும் 4448 நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தும் முறைகளையும் கூறினார்கள். மேலும் நோய்கள் வரும் முன் காக்க இந்த மூலிகைகளின் பயன்களையும் கண்டறிந்தனர். உணவின் மூலம் நோய்கள் தாக்காமல் இருக்கவும் வழி வகை செய்தனர். இதனால் நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றோ குழந்தைப் பருவத்திலிருந்தே இனம்புரியாத பல்வேறு நோய்களின் பிடியில் மனித இனம் சிக்கித் தவிக்கின்றது.

இடைப்பட்ட காலத்தில் மூலிகைகள் மீது நாம் காட்டிவந்த அலட்சியமே இதற்குக் காரணம்.

நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை களை என்று எண்ணி அழித்த நாம் இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது அவை நம் கண்ணில் அகப்படுவதில்லை.
இந்த கட்டுரையில் ஓரிதழ் தாமரையின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். தாமரை என்றவுடன் நீரில் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். இது நிலத்தில் வளரும் சிறு செடி வகையாகு

இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டது.

சிலர் உடல் நலம் பேணாமல் இரவு பகல் பாராமல் பொருள் தேடி அலைகின்றனர். அதிக தூக்கமின்மை, நேரத்திற்கு சரியாக உணவு அருந்தாமை போன்ற காரணங்களால் பலரின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. மேலும் சில தீய பழக்கங்கள் குடிகொண்டு உடல் என்னும் கோவிலை நாசப்படுத்திவிடுகின்றன.

இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடுபட ஓரிதழ் தாமரை மிகவும் பயனுள்ள மருந்தாகும். ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரையின் சமூலம் நல்ல மருந்தாகும்.

மேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிதழ் தாமரை சமூலம், பச்சை கற்பூரம், கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேகவெட்டை தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் மேகவெட்டை தீரும்.

உடலில் உள்ள புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.

சுரக்காய்ச்சலால் அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை கசாயம் செய்து அருந்தி வந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும். இரைப்பு நோய்க்கு இது அருமருந்தாகும். உடல் எடை குறைய ஓரிதழ்தாமரை கசாயம் சிறந்தது. இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது தாது வெளியேறும். இதனால் தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர். இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம். இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

                                                                       -பசுமைநாயகன்