பெண்கள் அழகிய கண்கள் பெற


பெண்கள் அழகிய கண்கள் பெற

                    பெல்லடோனா என்கிற இந்த மூலிகைத் தாவரத்தின் பூர்வீகம் மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா கண்டத்தை சாரந்தது. இதிலுள்ள மருத்தவ பயனால் இன்று உலகெங்கும் வளர்ப்பட்டு வருகிறது. இரண்டு மீட்டம் உயரம் கொண்ட குறுஞ்செடி வகையைச் சார்ந்தது.

இத்தாவரத்தில் டிரோபென் ஆல்கலாய்டுகள், ஃபிளேவனாய்டுகள், கௌமெரின்கள், எளிதில் ஆவியாகும் காரங்கள் இநிர் இருக்கிறது. இடலோபென் ஆல்கலாய்டுகளில் அட்ரோஃபைன் மற்றும் அயோசயமைன் ஆகியவை முக்கியமானது.

கண்ணை விரிக்க...

கண்ணின் பாப்பாவினை விரியச் செய்யும். இத்தாலிப் பெண்கள் தங்களின் கண்களை விரியச் செய்ய இதனைப் பயன்படுத்துகின்றனர். இதனால் இதற்கு 'அழகிய பெண்மணி' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. 

வயிற்றுப்புண் ஆற்ற..

வயிற்றுப்புண் ஆற்றுகிறது, தளர்ந்த உறுப்புகளை நல்ல நிலைக்குக் கொண்டு வரும். வயிறு மற்றும் குடல் பகுதி மீது செயல்புரிந்து குடல் வலியினைப் போக்கும் பெப்டிக்(Peptic ulcer) எனப்படும் வயிற்றுப் புண் குணமடைய உதவுகிறது. ஜீரண அமிலங்கள் சுரப்பினைக் கட்டுபடுத்தும். சிறுநீர் நுண்குழல்களை வலியினை போக்குகிறது. 


belladonna plant with fruits

மூட்டுவலி நீங்க...

ரூமாய்டாய்டிசம் என்னும் மூட்டுவலி பிரச்னைக்கு அரு மருந்தாகிறது. ஹைபர் தைராய்டினால் ஏற்படும் அதிக வியர்வை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

இதய துடிப்பை சீராக்க..

பர்கின்சன் நோயில் ஏற்படும் கை, கால் உதறல், விறைப்புத் தன்மையினை சரி செய்கிறது. கை கால் இயக்கதையும், குழறுகின்ற பேச்சையும் சரி செய்கிறது. இதய துடிப்பை அதிகரித்து இயங்கு தசைகளைக் கட்டுப்படுத்த வல்லதும், நல்லதொரு மயக்கமூட்டும் மருந்தாகவும் பயன்படுகிறது. மூச்சுக்குழல், ஜீரண சுரப்புகளை கட்டுக்குள் வைக்கிறது.
-P.V.உமாதேவி